களுவாஞ்சிகுடியில் பிரதேச மட்ட தொழிற்சந்தை

செ.துஜியந்தன் 


மனிதவலு வேலைவாய்பு திணைக்களமும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் தொடர்பான தொழிற்சந்தை இன்று(06) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ரவீந்திரனின் ஒழுங்கமைப்பில்,களுவாஞ்சிகுடி உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்திய கௌரி தரணிதரன் தலைமையில் நடைபெற்ற இத் தொழில் சந்தையில் 16 இற்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி மற்றும் தொழில் வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இதில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் படித்துவிட்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

No comments: