நாட்டில் தற்கொலை முயற்சிக்கு காரணம் தொழிலின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி - ஆய்வுத் தகவல்


இலங்கையில் தொழிலின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அநேகமானோர் தற்கொலை செய்துக் கொள்வதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, நாட்டில் பெரும்பாலானோர் பொருளாதாரம் மற்றும் தொழில் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துக் கொள்வதகாக தெரிவிக்கப்படுகிறது.

2020ம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இந்நாட்டில் 779 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

சுமித்ரயோ அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வறிக்கையின் படி இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டவர்களில் 635 பேர் ஆண்கள் எனவும் 144 பேர் பெண்கள் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: