நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 374 இலங்கையர்கள் நேற்று  இரவு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 74 இலங்கையர்களும், மாலைத்தீவில் இருந்து 10 பேரும், தென்கொரியாவில் இருந்து 285 பேரும் நேற்று இரவு நாட்டை வந்தடைந்தனர்.

இந்த நிலையைில் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த 374 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: