குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்ந்து மூடுவதற்கு தீர்மானம்


குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தூதரகத்தில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, குவைட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, தூதரகத்தை தொடர்ந்தும் ஒரு வார காலத்திற்கு மூடிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தூதரகம் எதிர்வரும் 18ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என குவைட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூதரகத்தில் பணியாற்றும் மூன்று பணியாளர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, குவைட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தூதரகம் நேற்றைய தினம் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மேலும் ஒருவார காலத்திற்கு மூடிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: