பொதுமக்களுக்கு காவற்துறை பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை


தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொது மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த தினங்களில் பொது போக்குவரத்தில் உரிய முறைமையில் தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் பொது இடங்களிலும், வரிசைகளிலும் தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளை பொதுமக்கள் பின்பற்றாத நிலைமையினை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

பொதுமக்கள் தொடர்ந்தும் இவ்வாறாக செயற்படுவார்களாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments: