கடற்பகுதியில் நீரில் மூழ்கி காணமல் போன இளைஞர்கள் சடலமாக மீட்பு


நீர்கொழும்பு-செத்தபாடு-கம்மல்தொட்ட முகத்துவாரம் கடற்பகுதியில் நீராடச் சென்று  காணமல் போன 3 இளைஞர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

7 இளைஞர்கள் குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் நீராடச் சென்ற நிலையில் அவர்களில் 3 பேர் காணமல் போயிருந்தனர்.

அவர்களில் 2 பேர் தலவாக்கலையைச் சேர்ந்தவர்கள் எனவும்,ஒருவர் பதுளை நமுனுகலையைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இந்நிலையில் 3 இளைஞர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments: