முகக்கவசம் அணிந்து பேரூந்துகளில் பயணிக்குமாறு பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தல்

செ.துஜியந்தன்


கிழக்கில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பிராந்திய சுகாதாரப் பரிசோதகர்களினால் பொதுமக்கள் மத்தியில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இன்று(05) மண்முனை தென் எருவில்பற்று பிராந்திய சுகாதரப்பணிமனையினால் சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் எஸ். கிருஸ்ணகுமாரின் வழிகாட்டலில் பிரதம மேற்பார்வை பொதுச்சுகாதரப்பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் பிரதேசத்தில் பேரூந்துகள் மற்றும் பொது இடங்களில் முககவசம் அணியாது சென்ற பொதுமக்களிடம்  முககவசம் அணிந்து சுகாதாரவழிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு ஆலோசனை, வழிகாட்டல்கள் பிரதேச பொதுச்சுகாதரப் பரிசோதகர்களினால் வழங்கப்பட்டது.

இதில் மண்முனை தென் எருவில்பற்று பிராந்திய  பொதுச்சுகாதரப்பரிசோதகர்களான  கே.இளங்கோவன், வி.கணேசன், எஸ்.சிவசுதன், எஸ்.விக்னேஸ்வரராஜா, எஸ்.ஜீவிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு களுவாஞ்சிகுடி பிரதான பேரூந்து தரிப்பு நிலையத்தில் பேரூந்துகள் நிறுத்தப்பட்டு முகக்கவசம் அணியாது சென்ற பயணிகளை முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தப்பட்டன. 

மண்முனை தென் எருவில்பற்றில் பிராந்திய சுகாதரப்பணிமனையினால் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments: