கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள்


கிளிநொச்சி மாவட்டத்தில் 30 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மூலம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தி திட்ட பணிகளுக்காக வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்த 30 பேருக்கே இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அண்மைக்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வெளிமாவட்டத்திலிருந்து வருகை தந்தவர்கள் குறித்து உடனடியாக சுகாதார சேவைகள் பணியகத்திற்கு அறியத்தருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: