நாட்டின் இன்றைய வானிலை


ஊவா,கிழக்கு,வடமத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக  வளிடண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால்  மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்த வானிலை காணப்படும் எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: