இன்று முதல் தொடர்த்தேர்ச்சியாக சுகாதார நடவடிக்கைகளை நுவரெலியா பிரதேச சபை மேற்கொள்ளும்- வேலு யோகராஜ் தெரிவிப்பு.

நீலமேகம் பிரசாந்த்


கொவிட் 19 மீண்டும் தலைதூக்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.ஆனால் அவற்றை அடியோடு அழிக்க நாம் அனைவரும் கைக்கோர்க்க வேண்டும் எனவே மீண்டும் சுகாதார நடவடிக்கைகளை வழமைபோல கடைபிடிக்க வேண்டும் என நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலுயோகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

அதன் முதற்கட்டமாக திங்கட்கிழமை (05/10/2020)  நுவரெலியா பிரதேச சபையின் பிரதான காரியாலயத்தில் கொவிட் 19 கொரோனா தொற்று நோய் நீக்கி தெளித்து தேவையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு காரியாலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இன்று முதல் ஒவ்வொரு நாளும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு காரியாலய வேளைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

No comments: