நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய தகவல்


நாட்டில் நேற்றைய தினம் 61 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டதுடன்,ஏனைய 48 பேரும் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2075 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5536 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3403 ஆக காணப்படுகிறது.

மேலும் 2120 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

No comments: