அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர்


எதிர்வரும் 6ம் திகதி முதல் 9ம் திகதி வரை அடுத்த நாடாளுமன்ற கூட்டுத்தொடரை கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாக இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி நிதி திருத்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பு மற்றும் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விதிமுறைகள் 6ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

ஒக்டோபர் மாதம் 7ம் திகதி தேசிய கட்டிடத் திருத்த வரி மசோதாவின் இரண்டாவது வாசிப்பு,பொருளாதார சேவை கட்டண திருத்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பு மற்றும்,துறைமுகங்கள் விமான நிலைய திருத்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பு ஆகியன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதங்கள் இடம்பெறும் எனவும் பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: