ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விடயத்தில் அரசாங்கம் உண்மை தன்மையோடு செயற்பட வேண்டும்- தவராசா கலையரசன்

சந்திரன குமணன்


ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விடயத்தில் அரசாங்கம் உண்மை தன்மையோடு செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்  தவராசா கலையரசன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  மழவராயன் கிராமத்தில் வாழும் மக்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக குடிநீர் , போக்குவரத்து ,மின்சார வசதிகள் அற்ற நிலையில் காட்டு யானைகளின் தொல்லைக்கு வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டினர். இதனை கேட்டறிந்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில். 

ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 10 ற்கு மேற்பட்ட வறிய குடுபங்களிலிருந்து ஒரு இலட்சம் வேலைவாய்ப்பிற்கு பிரதேச செயலகத்தில் இராணுவத்தினரின் இறுக்கமான நேர்முக பரீட்சையின் பின்னர் தெரிவாகினர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பில் இணைக்கப்படாமல் பணம் படைத்தவர்கள் தெரிவாகியிருக்கின்றனர் . நாட்டின் தலைவர்கள் இதனை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தொழில் வாய்ப்பு வழங்கும் விடையத்தில் உண்மைத்தன்மையோடு செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

No comments: