நாட்டின் இன்றைய வானிலை


ஊவா,கிழக்கு,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை,முல்லைத்தீவு,வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் ஊவா மற்றும்  திருகோணமலை  மாவட்டங்களில் சுமார் 50 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பலத்த காற்றும் இடியுடன் மழை பெய்யும் பகுதிகளில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

No comments: