நாட்டில் நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்
நாட்டில் நேற்றைய தினத்தில் 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும்,ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கை வந்த இந்திய கடலோடி ஒருவருக்கும்,செங்கடலில் இருந்து வந்த கடலோடி ஒருவருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3395 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3254 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 128 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் சென்ற நிலையில் கொரோனா தொற்றுறுதியாகி மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
No comments: