களனி பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா


களனி பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவங்கொட பகுதியை சேர்ந்த குறித்த மாணவியின் தந்தை கொரோனா கொத்தணி பரவியுள்ள ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

களனி பல்கலைகழகத்தில் சமூக விஞ்ஞான பீடத்தில்  குறித்த மாணவி கல்வி பயிலுகின்றார்.

இந்நிலையில், மாணவியுடன் தங்கியிருந்த மேலும் இரு மாணவிகள் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: