அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் முகக்கவசங்களும் அதிக விலைக்கு விற்பனை


ஊரடங்கு அமுலாகியுள்ள சில பகுதிகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் முகக்கவசங்களும் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சந்தர்ப்பங்களில் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட வர்த்தக தரப்பினருக்கு தாம் அறிவுறுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து அவதானம் செலுத்தப்படுவதாகவும்,இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவித்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments: