தொழில் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு


நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்சநிலைமைக் காரணமாக ஊழியர் சேமலாப பயனாளிகளின் விண்ணப்பங்களை அருகில் இருக்கின்ற தொழில் அலுவலகங்களில் மாத்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாளை முதல் தொலைபேசி வாயிலாக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கொழும்பில் உள்ள  ஊழியர் சேமலாப நிதி பயனாளிகள் 011 2368 904,011 2368 911 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: