கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு


கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான அட்டைகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்காத பாடசாலை பரீட்சார்த்திகள் தங்களது பாடசாலை அதிபரின் ஊடாக அறிவிக்குமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு நாளைய தினத்துக்குள் அனுமதி அட்டை கிடைக்கப்பெறவில்லையாயின் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பதிவிறக்கம் செய்து அதனை உறுதிப்படுத்திய பின்னர் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: