இந்தியாவை நோக்கி கொண்டு செல்லப்படும் தீப்பற்றிய நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பல்


தீப்பற்றிய நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பல்,இந்தியாவை நோக்கி கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும்,அது தற்போது மத்திய கிழக்கு சமுத்திர பரப்புக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலின் உள்ள மசகு எண்ணெய்யை வேறு கப்பலுக்கு மாற்றும் நோக்கில், வந்த மார்க்கத்தின் மூலமே மீள கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமுத்திர சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில் அந்தக் கப்பலைக் கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என சட்ட மா அதிபரின் இணைப்பு அதிகாரியான அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன,முன்னதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு சபையிடம் தெரிவித்திருந்தது.

எனினும்,நியூ டயமன்ட் கப்பல் மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கி கொண்டு செல்லப்படுகின்ற நிலையில் கடற்படைக்கு சொந்தமான சமுதுர மற்றும் சசுறு என்ற இரண்டு கப்பல்கள் அந்தப் பணியில் இணைந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல்,இலங்கை கடற்பரப்பைக் கடந்து சர்வதேச கடல் எல்லையை சென்றடைவதற்கு மேலும் 4 நாட்கள் எடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கு இழப்பீட்டையும் செலவுகளையும் வழங்குவதாக வெளியிட்ட உறுதிப்பாட்டுக்கு அமைய தீ விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பல் கொண்டு செல்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: