பேருவலை துறைமுகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்


கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பேருவலை துறைமுகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருவலை துறைமுகத்திலிருந்து பேலியகொடை மீன் சந்தை வரை சென்ற சிற்றுாந்து ஒன்றின் சாரதிக்கும் அவருடைய தொடர்பைப் பேணியவர்களுக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த துறைமுகத்திற்கு அண்மித்த பகுதியைச் சேர்ந்த 100 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டிருந்நதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: