ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தி


கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கே  இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளது.

No comments: