மீன் விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


பேலியகொடை மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்து விற்பனை செய்து வந்த ஹட்டன் மற்றும் தலவாக்கலை நகர மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்தவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

பேலியகொடை மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு விற்பனை செய்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை நிலையங்களே ஹட்டன் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகரசபையினால் 23/10  இன்று மூடப்பட்டுள்ளது.

மேலும் பேலியகொடை மீன் சந்தையில் வேலை செய்த டிக்கோயா தரவளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஐ.டி எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது குடும்பத்தினர் டிக்கோயா தரவலை வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

எனினும் குறித்த இளைஞன் ஒரு மாத காலமாக டிக்கோயா தரவலை வீட்டிற்கு வரவில்லை என சுகாதாத பரிசோதர்கள் தெரிவித்தனர். 

No comments: