நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரிஷாட் பதியுதீன்


கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை தெஹிவளைப் பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தனது வீட்டில் தங்க வைத்த குற்றச்சாட்டில் தெஹிவளையில் உள்ள வைத்தியர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6 நாட்களாக தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: