புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம்


புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.ஜீ.கே.மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நாட்டு மக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னதாக நிபுணத்துவ குழு, பௌத்தலோக்க மாவத்தை கொழும்பு 7 எனும் முகவரிக்கு  அல்லது experscommpublic@yahoo.com எனும் முகவரிக்கோ அனுப்பிவைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு www.moj.gove.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்க முடியுமெனவும்   நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.ஜீ.கே.மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

No comments: