நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


நாட்டில்  நேற்றைய தினத்தில் 6 பேர் கொரோனா  தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா,குவைட்,ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒவ்வொருவருக்கும்,ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து  நாடு திரும்பிய 3  பேருக்கும் நேற்று கொரோனா தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3388 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3245  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 127 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: