பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு விடுத்தார் அர்ஜுன ரணதுங்க


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கம்பஹா மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனது முடிவை அவர் நேற்று தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்தில், ஐ.தே.க பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன கம்பஹா மாவட்டத்திலிருந்து போட்டியிட்டு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் தனது தலைமைத்துவம் இதற்கு பொருத்தமற்றதாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments: