மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு


மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 131 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  காலை 06 மணிமுதல் இன்று அதிகாலை 05 மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்களில் 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: