இலங்கை போக்குவரத்து சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்துார பேருந்துச் சேவைகளை நிறுத்துவதாக இலங்கைப் போக்குவரத்து சபையின் செயலாளர் கிங்ஸ்லி ரணவக்க  தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இன்று இரவு முதல் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்படும் நெடுந்தூர சேவைகளை நிறுத்தத் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கோட்டை,புறக்கோட்டை  உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments: