பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் செங்காமம் கிராம மக்களை வீட்டை வெளியேற நிர்ப்பந்திப்பதாக குற்றச்சாட்டு

சந்திரன் குமணன்


பழம் பெரும் கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் அரசியல்,நிருவாக ரீதியான புறக்கணிப்பில் வாழ்விடங்களை இழந்து வீதிக்கு வந்துள்ள அவலம்.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள செங்காமம் கிராம மக்களே இந்த நூற்றாண்டின் இவ்வாறான ஒரு அவல நிலையை எதிர்கொண்டுள்ளார்.

மேற்குறித்த பிரதேசத்தில் வாழும் மக்கள் நன்னீர் மீன்பிடி,சேனை பயிர் செய்கையினை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். அவ் மக்களின் ஜீவநோபாய சேனை பயிர் செய்கையினை ஊடறுத்து வன பரிபாலன இலாகாவினால் இரவோடு இரவாக எல்லை கல் நடப்பட்டு அந்த மக்களின் வாழ்விடங்களில் இருந்து அரச காணியை அபகரித்ததாக சோடனை செய்து விரட்டி விட பட்டுள்ளனர். இதனை மீறி அந்த மக்கள். வாழ்ந்த காணிக்குள் சென்ற குடியிருப்பு வாசிகள் மீது இலங்கை அரசின் சட்டம் பாய்ந்துள்ளது. 

*அரசியல் பின்னணி

81% மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் தமிழ் மக்கள் 18%வீதம் வாழ்கின்றனர் .இங்கேதான் தமிழ் மக்கள் மீதான இன வாத அடக்கு முறை கோலோச்ச தொடங்குகிறது. 

கடந்த யுத்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திய ஒரு சமூகம் இன ரீதியாக குறைவாகவுள்ள தமிழர்கள் மீது அரசியல்,நிருவாக ரீதியாக பயன்படுத்தி வந்தனர்.

அண்மை காலங்களாக தமிழர்களின் ஆதிக்கம் பொத்துவில் பிரதேசத்தில் அரசியல்,நிருவாக ரீதியாக வளர்ச்சி பெற்று வருகிறது. குறிப்பாக பொத்துவில் பிரதேச சபை உப தவிசாளராக பி.பார்த்தீபன் , வரலாற்றில் முதல் தடவையாக பொத்துவில் பிரதேச செயலாளராக ஆர் . திரவியராஜ் நியமிக்கப்பட்டார்.

*மதமாற்றம்

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செங்காமம் பிரதேசம் கடந்த காலங்களில் யுத்த சூழ்நிலையில் வெகுவாக பாதிக்கப்பட்ட ஒரு கிராமம்.  முஸ்லிம்   சமூகத்தின் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால் அந்த மக்களின் அடிப்படை ஜீவனோபாய வசதிகள் திட்டமிட்டு புறக்கணிக்க பட உயிர் வாழ வேண்டி இஸ்லாம்  மத மாற்றத்தை  நாடவேண்டியிருந்தாக எம்மிடம் தெரிவித்தனர்.

மத மாற்றத்தின் பின்னர் வீட்டு வசதிகளை கோரிய பெண்களுக்கு பள்ளிவாசல் தலைவர் தகாத வார்த்தைகளால் ( யாரை நம்பி மதம் மாறி பிள்ளை பெற்றீர்கள் என துர்வாத்தகளை பேசியதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

*ஆக்கிரமிப்பு

கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பல வீட்டு திட்ட வசதிகள் மூலம் நூற்றுக்கணக்கான வீடுகள் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டன. ஆனால் வீட்டிற்கான எந்தவித அறுதி பத்திரங்களோ ஆவணங்களோ அன்றி வாழ்ந்து வந்த நிலையில் தற்போதைய பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் வாஷித் உள்ளிட்ட உள்ளூர் அரசியல்வாதிகளும்  அதிகாரிகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். 

இதில் குறித்த வீட்டின் மின்னிணைப்பை அந்த மக்களின் பெயரில் வரும் பற்றுச்சீட்டுக்கு அமைவாக செலுத்தி வருகின்றனர். அரச அதிகாரிகளுக்கு பல ஏக்கர் காணி இருக்க முடியுமானால் ஏன் இலங்கையின் எந்த பாகத்திலும் காணி அற்ற எங்களுக்கு ஒரே பிடி நிலமும் வழங்க படவில்லை என ஆதங்கத்தை குமுறினர். பணம் படைத்தவர்களுக்கு 25 ஏக்கர் காணி உள்ள நிலையில் ஒரு துண்டு காணியுமின்றி இருக்கும் தங்களுக்கு ஏன் வழங்க முடியாது என வெளிப்படுத்தினர்.

இஸ்லாம் மதத்தை தழுவிய குடும்பங்கள் தங்களின் வாழ்வாதார அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் போது தாய் மதம் திரும்ப விருப்பம் தெரிவித்தனர்.

No comments: