கடற்பகுதிக்கு நீராடச் சென்று காணமல் போன இளைஞர்களை தேடும் பணிகள் தீவிரம்


நீர்கொழும்பு - செத்தபாடு கம்மல்தொட்ட முகத்துவாரம் கடற்பகுதியில் நீராடச் சென்ற காணமல் போன 3 இளைஞர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மஸ்கெலியாவில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று இளைஞர்களே குறித்த பகுதிக்கு நீராடச் சென்று காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக  காவற்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: