மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடையவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள்


மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய சுமார் 5000 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதான மருத்துவ அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்தள்ளார்.

இந்நிலையில் நாடு பூராகவும் இதுவரை 3 இலட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான பிசி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் 28 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது.

மினுவாங்கொட ஆடைத் தாழிற்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றுறுதியானவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1053 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 7 பேருக்கும்,ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், குவைட்டில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4488 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3278 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1197 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


No comments: