இன்று முதல் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து பயணத்தில் மாற்றம்


நாடளாவிய  ரீதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும்  இன்று முதல் சுகாதார நடைமுறைகளை கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்தல் மற்றும் வெப்பநிலை பரிசோதனை ஆகிய சுகாதார நடைமுறைகள் இன்று  முதல் அமுல்படுத்தப்படவுள்ளன.

நாடளாவிய  ரீதியில் ரயில் நிலையங்களில் இந்த சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுப் போக்குவரத்தில் அரச மற்றும் தனியார் பேருந்துகளிலும் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை உள்வாங்குமாறு   போக்குவரத்து அமைச்சு அறிவிறுத்தியுள்ளது.

உடன் அமுலாகும்  வகையில் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


No comments: