நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


நாட்டில் கொரோனா  தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3382 ஆக அதிகரித்துள்ளது.

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3233 ஆக அதிகரித்தள்ளது.

மேலும், கொரோனா  தொற்றுக்குள்ளான 134 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக 2 இலட்சத்து 89 ஆயிரத்து 588 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: