நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம்-பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண


நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்போவதாக பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் இதுவரை அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.

அதனால் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் இவ்வாறான செய்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

அரசாங்க தகவல் திணைக்களம், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் இணையத்தளங்கள் ஊடாக வெளியிடப்படுகின்ற தகவல்களை மாத்திரம் கேட்டு, உண்மை பொய்களை அறிந்து கொள்ளுங்கள்” என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: