பொது போக்குவரத்து சேவைகளை மறுசீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை


நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் பொது போக்குவரத்து சேவைகளை மறுசீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்தினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், யாழ் நோக்கி பயணிக்கும் ரயில்களில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலானேரே கடந்த நாட்களில் பயணித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பொது போக்குவரத்து சேவைகளை மறுசீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: