நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய தகவல்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 105 பேர் நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 2 பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய 101 பேருக்கும்,வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும்  நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  1083 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4628 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்க 3306 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்,1309 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments: