இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்


வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில்  ஏற்பட்டுள்ள  கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக  தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஏற்படும் இடப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் குறித்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று நள்ளிரவு 12 முதல் இந்த நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: