தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை


பேரூந்து கட்டணங்களை அதிகரித்தல் உள்ளிட்ட 6 கோரிக்கைகள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த   தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் எதிர்வரும் உயர்தரப்பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சநிலைமை காரணமாக கடந்த பல மாதங்களாக முழுமையான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதன்காரணமாக பொருளாதார  ரீதியில் கடுமையான பாதிப்பினை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே எதிர்வரும் சில நாட்களுக்குள் தங்களது கோரிக்கை தொடர்பில் தீர்மானம் முன்வைக்கப்படாவிடின் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வடக்கு கிழக்கு   உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் னியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: