மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 5 பேர் மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருவர் மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியருடன் நெருங்கிய தொடர்புடையவர் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ளது.

No comments: