கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களுக்கான எச்சரிக்கை


நாட்டில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால், நாளை காலை வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments: