இராணுவத்தினரால் வீதிகளில் விசேட சோதனை நடவடிக்கை.

ஏ.எல்.எம்.ஷினாஸ்     


தற்போது நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதால் கொரோணா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீதிகளில் பயணிப்போர் முகக்கவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

கல்முனை பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களில் இராணுவத்தினரால் விசேட வீதி சோதணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீதிகளில் முகக்கவசம் அணியாமல் பயணிப்போர் மீது பொலிசாரும் இராணுவத்தினரும் ஒன்றிணைந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொது கூட்டங்கள் , தனியார் வகுப்புக்கள், களியாட்ட நிகழ்வுகள் நடத்துவது மற்றும் வீதிகளில் வீணாக ஒன்று சேர்வது போன்றவற்றை கட்டுப்படுத்த முப்படையினரும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.
No comments: