துறைமுக அதிகாரசபை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்


மறு அறிவித்தல்வரை துறைமுக அதிகாரசபை ஊழியர்களை வேலைக்குச் சமூகமளிக்க வேண்டாம் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட மற்றும் திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள துறைமுக அதிகாரசபை ஊழியர்களுக்கே குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெயாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவிப்பினை விடுத்துள்ளார்.

No comments: