சுகாதார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை


அரச வைத்தியசாலைகளில் கிளினிக் ஊடாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் நோயாளர்கள் மறு அறிவித்தல் வரை வைத்தியசாலைக்கு சமூகமளிப்பதை தவிர்த்து செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார  சேவைகள்  பதில் பணிப்பாளர் நாயகம்  வைத்தியர் எஸ் ஶ்ரீதரன்  இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரச வைத்தியசாலைகளின் கிளினிக் நோயாளர்களுக்கு தேவையான  மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக  சுகாதார  சேவைகள்  பதில் பணிப்பாளர் நாயகம்   குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: