கோப் குழுவின் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவின் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை 5 நாட்கள் கோப் குழு கூடவுள்ளதாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட ‘லங்கா கோல் கம்பனி பிரைவட் லிமிடெட்’ கோப் குழுவின் முன்னிலையில் முதலாவதாக அழைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 9ஆவது நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு இன்று முதல் எதிர்வரும் 9ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இன்றைய தினம், நிதி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: