நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா  தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் இங்கிலாந்தில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 263 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்-504 எனும் விமானம் ஊடாக இன்று பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்குப் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: