பிரித்தானியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட கழிவுப்பொருட்களை அந்நாட்டிற்கு மீள அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு


பிரித்தானியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட கழிவுப்பொருட்கள்  அடங்கிய 242 கொள்கலன்களை மீளவும் அந்நாட்டிற்கு அனுப்புமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.

கழிவுப்பொருட்கள் அடங்கிய இந்த கொள்கலன்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதற்கு எதிராக, சுற்றாடல் பாதுகாப்பு கேந்திர நிலையம் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று நிறைவுக்கு வந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமைமை நீதிபதி H. M. D. நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த கொள்கலன்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக செயற்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: