வவுனியா காவற்துறையினரின் விசேட அறிவித்தல்


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சநிலைமையை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா மாவட்டத்தில் இன்று முதல் அமுலாகும் வகையில் சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி குறித்த சுகாதார வழிகாட்டல்களை  பொதுமக்கள், வர்த்தக நிலையங்கள் பின்பற்ற வேண்டுமென வவுனியா பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

குறிப்பாக பொதுமக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றுதல், முகக்கவசம்  அணிதல் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு  எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் கைகளை சுத்தப்படுத்தும் வசதிகள் அல்லது தொற்று நீக்கும்  திரவம்  வைத்திருக்கும்  சுகாதார நடைமுறையினை பின்பற்றுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: