தொழில் திணைக்களத்தின் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்


தொழில் திணைக்களத்தின் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 26ம் திகதி முதல், ஊழியர் சேம இலாப நிதியத்தைப் பெறும் பயனாளர்களின் விண்ணப்பங்கள், அருகிலுள்ள தொழில் திணைக்களத்தின் அலவலகங்கள் ஊடாக மாத்திரமே பெற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.கே பிரபாத் சந்திரகீர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சேவையைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பயனாளர்கள், முன்கூட்டியே தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, 0112 36 89 04 அல்லது 0112 36 89 11 என்ற இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு, தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.கே பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் பொது மக்களுக்கான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் பிரதேச அலுவலகங்கள் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: