நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு


கலேவெல பகுதியில் மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கலேவெல பிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கலேவெல-பொஸ்பொத கால்வாயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

12 மற்றும் 15 வயதுடைய இரண்டு யுவதிகளும், 7 வயதுடைய சிறுவன் ஒருவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த குறித்த சிறுவர்களை காணவில்லை என இன்று காலை கலேவெல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம்  தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: